இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேஸ் புக்கில்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மக்களை தொடர்புகொள்வதற்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம்; காட்டி வருகிறார். இந்த நிலையில் அவர் பிரதமராக பதவி ஏற்ற பின்னர் பிரதமர் அலுவலகத்துக்குகென அதிகாரபூர்வ ‘பேஸ் புக்” எனப்படும் சமூக வலைத்தள பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மோடி, பிரதமர் அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. பிரதமரின் சந்திப்புகள், அறிவிப்புகள் அனைத்தும் இடம் பெறுகின்றன. இந்த நிலையில், இது பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
‘பேஸ் புக்’ பக்கம் ஆரம்பிக்கப்பட்ட 4 நாளில் 11 லட்சம் பேர் ‘லைக்” செய்துள்ளனர்.
இது ஒரு சாதனை அளவாக கருதப்படுகிறது.இதன் மூலம் பிரதமர் அலுவலகத்துக்கு யோசனைகளையும், கருத்துகளையும் மக்கள் தெரிவித்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்துக்கு 14 லட்சம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply