பெல்ஜியம் நாட்டில் வானத்தில் சமைத்து, பரிமாறப்பட்ட அறுசுவை விருந்து

பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ருசெல்ஸ்-சில் வியக்க வைக்கும் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.இதற்கென ‘குடை ராட்டினம்’ போன்றதொரு வட்ட வடிவில் சாப்பிடும் அறை தயாரிக்கப்பட்டு, அந்நகரில் உள்ள மிக உயர்ந்த கட்டிடமான ’பர்க் டியு சின்குவண்டெனெய்ர்’ கட்டிடத்தின் உச்சியில் இருந்து கிரேன்களின் உதவியால் நிலை நிறுத்தப்பட்டது. கைதேர்ந்த பிரபல சமையல் கலைஞர் ஒருவர் அதில் இருந்தபடியே சுடச்சுட உணவு வகைகளை தயாரித்து அளிக்க, சொக்க வைக்கும் ‘ஒயின்’னுடன் அவை பறிமாறப்பட்டன. இழுத்து கட்டப்பட்ட பாதுகாப்பு பெல்ட்களுடன் இருக்கைகளில் அமர்ந்திருந்த வாடிக்கையாளர்கள், ‘நாம் இருப்பது பூலோகமா? இல்லை, மேல் லோகமா?’ என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முடியாத வினோதமான ‘திரிசங்கு’ நிலையில், ப்ருசெல்ஸ் நகரின் முழு அழகையும் ரசித்தபடி, இந்த விருந்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகளை பதம் பார்த்தனர். வரும் 29-ம் தேதி வரை இந்த ‘வான விருந்து’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply