சுகாதாரத்துக்கு தீங்கிழைக்கும் பொருட்களை விற்பனை செய்ய இடமளிக்க முடியாது : ஜனாதிபதி

மக்களின் சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை சட்டவிரோதமாக சந்தைக்கு விநியோகிக்கும் வர்த்தகர்களுக்கு திரளாக கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுவித்துள்ளார். சுகாதார அமைச்சும் நுகர்வோர் விவகார அதிகார சபையும் ஒன்றிணைந்து இது தொடர்பில் முறையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டுமென பணித்துள்ள ஜனாதிபதி இத்தகைய செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் உட்படுத்துமாறும் கேட்டுக்கொண்டு ள்ளார்.

அத்துடன் அவர்கள் முன்னெடுக்கும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். காலாவதியான மருந்துகள் நறுமணப் பொருட்கள் மற்றும் ஒப்பனை கிஅம்கள் ஆகியவற்றின் காலாவதி திகதியை மாற்றி சந்தைக்கு விற்பனை செய்துள்ள நிறுவனங்கள் தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை சுற்றிவளைப்புக்களை நடாத்தியுள்ளது.

இங்கு கைப்பற்றப்பட்ட பொருட்களின் ஒரு பகுதி அலரிமாளிகையில் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டு அவரது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்தே ஜனாதிபதி மேற்படி பணிப்புரையை விடுத்துள்ளார்.

காலாவதியான மருந்து வகைகள் பல சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டு ள்ளதுடன், அது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து அதிகார சபையினர் அது சம்பந்தமாக ஜனாதிபதி அவர்களுக்கு அறிவித்துள்ளனர். இதன்போதே உடனடி சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

மக்களின் சுகாதாரத்துக்கு தீங்கிழைக்கும் பொருட்களை விற்பனை செய்ய எவருக்கும் இடமளிக்க முடியாது என உறுதியாகத் தெரிவித்த ஜனாதிபதி எதிர்காலத்தில் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply