விபத்தில் செந்தில் தொண்டமான் உட்பட 31 பேர் வைத்தியசாலையில் ஒருவர் பலி
பண்டாரவளை பகுதியில் வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊவா மாகாண சபை வேட்பாளர் செந்தில் தொண்டமான் சென்று கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் 31 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துடன் தொடர்புடைய சாரதி தப்பிச்சென்றிருந்த நிலையில் குறித்த சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.நேற்று மாலை தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் பின்னரே இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. விபத்தில் காயமடைந்தவர்கள் தியதலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,செந்தில் தொண்டமான் மேலதிக சிகிச்கைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply