நைஜீரியாவில் 200 பெண்களை கடத்திய தீவிரவாதிகள்
நைஜீரியா நாட்டில் போஹோகராம் என்ற தீவிரவாதிகள் பல இடங்களை கைப்பற்றி வைத்துள்ளனர். அவர்கள் கிராம பகுதிக்குள் புகுந்து மக்களை கொல்வது, ஆட்களை கடத்தி செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஒரு பள்ளி விடுதிக்குள் புகுந்து 200 மாணவிகளை கடத்தி சென்றனர். அவர்களின் கதி என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.
இந்த நிலையில் குலாக் என்ற நகரத்துக்குள் தீவிரவாதிகள் புகுந்தனர். அவர்கள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அங்கிருந்த 50 பெண்களை கடத்தி சென்றனர். இவர்களில் திருமணமான பெண்களும் உள்ளனர்.
கடத்தப்பட்ட பெண்களை தீவிரவாதிகளுக்கு திருமணம் செய்து வைப்பது போன்றவற்றில் தீவிரவாதிகள் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இவர்களையும் தீவிரவாதிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply