இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ள்ள பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா பாராளுமன்றம் வருகை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ள்ள பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா நேற்று பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார். இவர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், சபை அமர்வுகளையும் பார்வையிட்டிருந்தார். நேற்று பிற்பகல் பாராளுமன்றத்துக்கு வந்த கமலேஷ் சர்மாவுடன், சபாநாயகர், பிரதி சபாநாயகர், சபை முதல்வர் உள்ளிட்ட குழுவினர் விசேட கலந்துரை யாடல் மண்டபத்தில் வைத்து கலந்துரையாடியிருந்தனர்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து பிற்பகல் 1.45 மணிக்கு கமலேஷ் சர்மா சபைக்குள் வருகைதந்து சபாநாயகரின் விருந்தினர் களுக்கான கலரியில் அமர்ந்திருந்தார். கமலேஷ் சர்மா தலைமையிலான குழுவினரை சபாபீடத்தில் அமர்ந்திருந்த குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேசையில் தட்டி தமது வரவேற்பைத் தெரிவித்தனர். பிற்பகல் 2 மணிவரை அவர் கலரியில் அமர்ந்திருந்து சபை நடவடிக்கைகளைக் கண்காணித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply