வடக்கில் இன்னும் 164 கிராமங்களுக்கு மாத்திரமே மின்சாரம் வழங்க வேண்டியுள்ளது : அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி
வடமாகாணத்தில் 164 கிராமங்களுக்கு மாத்திரமே இன்னமும் மின்சாரம் வழங்கப்படவேண்டியுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுவிடும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மொழி விடைக்கான கேள்விநேரத்தில் ஐ.தே.க எம்பி சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, வடமாகாணத்தில் 164 கிராமங்களுக்கு மாத்திரமே இன்னமும் மின்சாரம் வழங்கப்படவேண்டியுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் 23 கிராமங்களுக்கும், யாழ்ப்பாணத்தில் 5 கிராமங்க ளுக்கும், முல்லைத்தீவில் 68, கிளிநொச்சி 49, மன்னார் 19 கிராமங்களுக்குமே இன்னமும் மின்சாரம் வழங்கப்படவேண் டியுள்ளது.
இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் இக்கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வடபகுதியில் உள்ள மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் மின்சார இணைப்புக்கு திவிநெகுமத் திட்டத்தின் கீழ் கழிக்கப்படும் இணைப்புக் கட்டண அறவீடுகளிலிருந்து விலக்களிப் பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என சஜித் பிரேமதாச எம்பி கேள்வி யெழுப்பியிருந்தார்.
மின்சார இணைப்புக்களை வழங்கு வதற்கு மிகவும் குறுகிய காலமே இருப்பதால் இது தொடர்பில் அதிகாரி களுடன் கலந்துரையாடி எதிர்வரும் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply