காணாமல் போனோர் பற்றி இன்று முல்லைத்தீவில் முறைப்பாடுகள் பதிவு
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் இன்று மீண்டும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்றன.இன்று முதல் 5ம் திகதி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி இன்று மற்றும் நாளை கரைத்துரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவுள்ளன.
மேலும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நவம்பர் 4 மற்றும் 5ம் திகதிகளில் ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் அடங்கலாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு தமது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply