ஈராக்கில் ஐ.எஸ்.தீவிரவாத தலைவர்களை குறிவைத்து குண்டு வீச்சு

ஈராக்கில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் பகுதிகளை மீட்க அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று மொசூல் அருகேயுள்ள அல்–குயாயிம் நகரில் தீவிரவாத இயக்க தலைவர்கள் கூடியிருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே, அங்கு அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. அதில், இஸ்லாமிய தேசத்தின் அன்பர் மாகாண ஆட்சியாளர் அபு முகானட் அல்– ஸ்வேதாவி மற்றும் சிரியாவின் டெர்எல்–ஷோயுர் மாகாண ஆட்சியாளர் அபு ஷக்ரா அல்–மகாம்தி ஆகியோர் உயிரிழந்தனர்.இந்த தகவலை ஈராக் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், அவர்களுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபுபகர்–அல் பக்தாரியும் கொல்லப்பட்டார் என்றும், காயத்துடன் உயிர் தப்பியதாகவும் வதந்தி பரவியுள்ளது.

ஆனால், தீவிரவாதிகள் நடத்திய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்றும் உறுதியாக கூறப்படுகிறது. ஆனால், ‘இஸ்லாமிய தேசம்’ சார்பில் இது குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த தாக்குதலில் தீவிர வாதிகளின் பல வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பாக 10 ஆயுத வாகனங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் பாட்ரிக் ரைடர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply