ஜனாதிபதியின் நீதிமன்ற விளக்கம் கோரல் ஒரு தந்திரம் : சரத் என்.சில்வா
தனக்கு மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா ? என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதி மன்றத்திடம் விளக்கம் கோரியிருப்பது, வஞ்சகமான ஒரு நடவடிக்கையாகும் என முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார். ஐந்து நாட்களுக்குள் விளக்கம் கோரி நீதிமன்றத்திற்குக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. அத்துடன், நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான தினமும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை அவதானிக்கும் போது எமக்கு நீதிமன்றம் தொடர்பில் நம்பிக்கையில்லை.தற்பொழுது வழங்கப்பட்டுள்ள காலம் எழுத்து மூலமான அறிவிப்புக்களைச் செய்வதற்கு போதியதன்று. இதனால், நாம் இதற்கு எழுத்து மூலமான விளக்கங்களை வழங்க மாட்டோம் எனவும் முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா இன்றைய சிங்கள தேசிய ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன், மூன்றாவது முறையாக போட்டியிடுவதற்கு எதிராகவுள்ள தடைகளை நீக்கிக் கொள்ள ஜனாதிபதி மேற்கொள்ளும் ஒரு தந்திரமே இதுவெனவும் முன்னாள் நீதியரசர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply