மியான்மர் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூகியுடன் மோடி சந்திப்பு
12-வது ஆசியான்-இந்தியா மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக மியான்மர் நாட்டுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி நே பி தா நகரில் உள்ள பார்க் ராயல் ஓட்டலில் தங்கி உள்ளார். நேற்று பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசிய மோடி, மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவியும், அந்த நாட்டில் ஜனநாயகத்துக்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக குரல் கொடுத்து வருபவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகியையும் சந்தித்தார். இந்த சந்திப்பு மோடி தங்கியிருந்த ஓட்டல் அறையில் நடந்தது. அப்போது இந்தியாவை தனது 2-வது தாய்நாடு என்று ஆங் சான் சூகி தெரிவித்தார். சூகியை மோடி சந்தித்து பேசியது இதுவே முதல் முறை ஆகும்.சூகியின் தாயார் தா கின் யி 1960களில் இந்தியாவுக்கான மியான்மர் தூதராக பணியாற்றியவர் என்பதும், 1964-ம் ஆண்டு ஆங் சான் சூகி டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply