இன்று வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமானால் நாடாளுமன்றம் இயல்பாகவே கலைந்துவிடும்!

இலங்கை நாடாளுமன்றத்தில் 2015ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெறும் போது பல முரண்பாடுகள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலவேளைகளில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமானால் நாடாளுமன்றம் இயல்பாகவே கலைந்துவிடும் நிலை உள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி தமக்கிருக்கும் அதிகாரத்தை கொண்டு நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவிடலாம்.அண்மையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, வரவு செலவுத் திட்ட கடைசி நாளில் பலர் தம்பக்கம் வருவர் என்று தெரிவித்திருந்தார்.

இதேவேளை இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இறுதிவரை சபையில் இருக்கவேண்டும் என்று அரசாங்கக்கட்சி பிரதம அமைப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இன்றைய வாக்கெடுப்பு மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply