அமெரிக்காவில் சிறுவனை சுட்டுக் கொன்ற போலீசார்
அமெரிக்காவில் ஒகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ் லேண்டு நகரில் ஒரு விளையாட்டு மைதானத்தில் 12 வயது சிறுவன் துப்பாக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். இதுகுறித்து ஒருநபர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள் அவனிடம் 2 கைகளையும் மேலே தூக்கி சரண் அடையும்படி எச்சரித்தனர். ஆனால் அதை அவன் கண்டு கொள்ளவில்லை. இதனால் அவனை போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் குண்டு காயம்பட்ட அவன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தான். அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். விசாரணையில் அவனது பெயர் தமீர்ரைஸ் என தெரியவந்தது. அவன் வைத்திருந்தது உண்மையான துப்பாக்கி அல்ல. போலியான விளையாட்டு துப்பாக்கி என தெரியவந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply