வடக்கு,தெற்கு உறவுகளை புதுப்பித்து சாதனை படைத்த வரலாற்று தலைவர் மஹிந்தவை தோற்கடிக்க முடியாது : அமைச்சர் திஸ்ஸ கரலியத்த
வடக்கையும் தெற்கையும் இணைத்து நாட்டுக்கு சமாதானத்தைப் பெற்றுக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்று வெற்றியை பெறு வார் என்றும் அவரது வெற்றியை எவரா லும் தடுக்க முடியாதென்றும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார். வடக்கிலும் தெற்கிலும் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு சந்தர்ப்பம் அமைத்துக் கொடுத்து எதிர்கால சந்ததியினருக்கு செளபாக்கியமான தாய்நாட்டை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்தார். அதுமாத்திரமின்றி இந்நாட்டில் அபிவிருத்தி யுகத்தை ஏற்படுத்திய ஒப்பற்ற தலைமைத்துவத்தை உலகிற்கு வெளிக்காட்டிய தேசத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையே சாரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ரம்பாவ பிரதேச செயலகத் திற்குட்பட்ட 110 குடும்பங் களுக்கு ரண்பிம காணி உறுதி வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற் றுகையில்,
இந்நாட்டு சிறுவர்களுக்கு அன்பு காட்டும் தேசத் தலைவர்களில் மஹிந்த ராஜபக்ஷவைப் போன்று எவரும் இருக்கவில்லை. எதிர்க்கட்சியினர் எந்த வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் இந்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் அபிவிருத் திகளை எமது எதிர்கால சந்ததியினர் அனுபவிக்கப் போகிறார்கள்.
மக்களின் ஆசீர்வாதத்துடன் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் தமது தனிப் பட்ட இலாபங்களுக்காக கட்சியையோ அல்லது நாட்டையோ காட்டிக் கொடுப் பார்களானால் அவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.
யுத்தத்தில் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்த இந்நாட்டு மக்கள் தற்போது நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த நிம்மதியை கெடுப்பதற்கு சிலர் திரைமறைவில் செயற்பட்டு வருகின்றனர். அதற்கு ஒருபோதும் மக்கள் இடமளிக் கமாட்டார்கள் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply