சார்க் தலைவர்கள் மாநாடு: ஜனாதிபதியின் விஜயம் வெற்றி சார்க் அமைப்பில் ஜனாதிபதியே சிரேஷ்ட தலைவர் : பீரிஸ்
ஜனாதிபதியின் சார்க் தலைவர்கள் மாநாட்டு விஜயம் வெற்றிகரமாக இடம் பெற்றதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். நேபாளத்தில் நடைபெற்ற சார்க் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அதிகாலை 1.30 மணிக்கு நாடு திரும்பியதாகவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகமாநாட்டில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், சார்க் நாட்டு தலைவர்களிலே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவேமிகவும் சிரேஷ்ட தலைவராவார். இந்த மாநாட்டின் போது ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். சார்க் உறுப்பு நாடுகளுக்கு எதிரான வெளித்தரப்பினரின் அநீதியான சவால் களுக்கு 8 சார்க் நாடுகளும் ஒன்றுபட்டு குரல்கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி இந்த மாநாட்டில் குரல்கொடுத்திருந்தார்.
சார்க் நாடுகளிலுள்ள 1.6 பில்லியன் மக்களினதும் நலனுக்காக சார்க் அமைப்பு செயற்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்து முக்கியமானது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் சரீபுடனான சந்திப்பில் கைத்தொழில் முதலீடு மற்றும் வர்த்தக மேம்பாடு குறித்து ஆராயப்பட்டது. சீனி உற்பத்தி குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
உயர்தரத்திலான மருந்து வகைகளை கொள்வனவு செய்வது தொடர்பாக பங்களாதேஷ் பிரதமருடன் ஆராயப்பட்டது. வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறைகளில் துரித திட்டங்கள் முன்னெடுப்பது பற்றி மாலைதீவு மற்றும் நேபாள நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடப் பட்டது.
வெற்றிகரமான சார்க் அரச தலைவர்கள் மாநாடு நேபாளில் நிறைவடைந்தது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply