காஷ்மீர் எல்லையில் பாக்.ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர்கள் பதிலடி
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கு வசதியாகவும் அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள். இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுக்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை அர்னியா பகுதியில் சர்வதேச எல்லையையொட்டி அமைந்துள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.2 நாட்கள் அமைதியாக இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தினார்கள். சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையையொட்டிய பகுதிகள் மீது, பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக்கு அப்பால் இருந்து நேற்று பகல் 11 மணி முதல் 12.45 மணி வரை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். 25 முறை துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு இந்திய பாதுகாப்பு படை வீரர்களும் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்திய பகுதியில் நடைபெறும் கட்டுமான பணிகளை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவத்தினர் கேட்டுக்கொண்டதாகவும், அதை நிறுத்த முடியாது என்று கூறி திட்டவட்டமாக மறுத்து விட்டதால் அவர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும், பதிலுக்கு இந்திய வீரர்களும் தாக்குதல் நடத்தியதாகவும் எல்லை பாதுகாப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்திய வீரர்களின் நலன் கருதி நமது பகுதியில் பாதுகாப்பு சுவர் கட்டப்படுவதாகவும், இதற்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply