உலகின் மிகப்பெரிய விமான நிலையம் ரூ.2 லட்சம் கோடியில் துபாயில் அமைகிறது
உலகின் இரண்டாவது பெரிய விமான நிலையம் என்ற பெயர் தற்போது துபாய் விமான நிலையத்துக்கு உண்டு. இந்த நிலையில், அந்த விமான நிலையத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில், உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்க துபாய் திட்டமிட்டிருக்கிறது. பசுமை விமான நிலையமாக இது 32 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் (சுமார் ரூ.2 லட்சம் கோடி) உருவாகிறது.இது பற்றி துபாய் விமான நிலைய கார்ப்பரேட் தகவல்கள் துறையின் தலைவர் ஜூலியஸ் பாமன் கூறும்போது, “புதிதாக உருவாகவுள்ள விமான நிலையத்தில் முதல் கட்டமாக 12 கோடி பயணிகள் வந்து செல்ல முடியும். 2020-ம் ஆண்டு, இந்த திட்டம் முழுமை அடைகிறபோது 20 கோடி பயணிகள் வந்து செல்ல இயலும். அப்போது இந்த விமான நிலையம், உலகின் மிகப்பெரிய விமான நிலையம் என்ற பெயரைப் பெறும். இதன் ஒவ்வொரு பிரிவும், 7 கால்பந்து மைதானத்தின் அளவில் இருக்கும்” என்றார்.
ஒரே நேரத்தில் இந்த விமான நிலையத்தில், 200 விமானங்களை நிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply