ஐரோப்பிய ஒன்றிய மேன் முறையீடுக்கு இலங்கை வரவேற்பு
எல்.ரி.ரி.ஈ மீதான தடையை நீக்குவது தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பை மேன்முறையீடு செய்வது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை இலங்கை வரவேற்றுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி எல்.ரீ.ரீ.ஈ. மீதான தடையை ரகசிய உத்தரவானது பயங்கரவாதத்துக்கு எதிராக முன்னெடு க்கப்பட்டுவரும் செயற்பாடுகளுக்கு சவாலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.இந்த செயற்பாட்டை வரவேற்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐரோப்பிய பிராந்தியத்தில் எல்.ரீ.ரீ.ஈ வலைப்பின்னல்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளுக்கு எதிரான விசாரணைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இலங்கை ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறது.
அமெரிக்கா, கனடா, இந்தியா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இவ்வாறான வலைப் பின்னல்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த வகையில் நீதிமன்ற தீர்ப்பை மேன்முறையீடு செய்ய ஒன்றியம் எடுத்திருக்கும் நடவடிக்கை வரவேற் கத்தக்கது.
எதிர்காலத்தில் எல்.ரி.ரி.ஈயினருடன் தொடர்புபட்ட வலைப்பின்னல் மீண்டும் பலமடைந்துவிடாத வகையில் நடவடிக்கை எடுப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளையும் பலப்படுத்த வேண்டும். இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply