ஏமன் நாட்டில் ஈரான் தூதர் வீட்டில் தற்கொலைப்படை தாக்குதல்: 3 பேர் பலி
அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில், ஈரானுக்கு நெருக்கமான ஷியா கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சானாவை கடந்த செப்டம்பர் மாதம் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்த நிலையில், அங்கு சானாவில் ஈரான் தூதர் வீட்டின் மீது, வெடிகுண்டுகளை காரில் நிரப்பி வந்து ஒரு தற்கொலை படை தீவிரவாதி நேற்று தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் ஏமன், ஈரான் காவலர்கள் உள்பட 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் நடந்த போது ஈரான் தூதர் வீட்டில் இருந்தாரா, இல்லையா என்பது குறித்து தகவல்கள் இல்லை.
ஏமனில் கடந்த காலத்திலும் ஈரான் தூதரக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது கடத்தப்பட்ட ஈரான் தூதரக அதிகாரி ஒருவர் இன்னும் பிணைக்கைதியாக உள்ளார். மற்றொருவர் இந்த ஆண்டு கடத்தல் முயற்சியை எதிர்த்து போராடியபோது கொல்லப்பட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply