கொலம்பியாவில் விமான விபத்து: 10 பேர் பலி
கொலம்பிய தலைநகர் பகோட்டாவில் இருந்து அங்குள்ள சுற்றுலா தலமான பகியா சொலானாவுக்கு தனியார் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று 8 பயணிகள் மற்றும் 2 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தது. இதில் 5 குழந்தைகளும் அடங்குவர். இந்த விமானம் மத்திய மாகாணமான டோலிமாவுக்கு உட்பட்ட மரிகுயிட்டாவுக்கு அருகே பறந்து கொண்டிருந்த போது, அதில் கோளாறு ஏற்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனே விமானத்தை அருகில் உள்ள விமான தளத்தில் அவசரமாக தரையிறக்க விமானி முயன்றார். ஆனால் அதற்குள் அந்த விமானம் நடுவானிலேயே வெடித்து சிதறி தரையில் விழுந்தது.இந்த கோர விபத்தில், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதற்காக போலீசாரும், தீயணைப்பு படையினரும் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply