ஜெர்மனி நாட்டு தூதரகத்தில் போலி ஆவணங்களுடன் விசா கேட்டவர் கைது
சென்னையில் உள்ள ஜெர்மனி நாட்டு தூதரகத்தில் விசா கேட்டு, மன்னார்குடியைச் சேர்ந்த சங்கர் (வயது 40) என்பவர் விண்ணப்பித்து இருந்தார். அவர் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று தெரிய வந்தது. இதுதொடர்பாக தூதரக அதிகாரிகள் அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சீனிவாசன் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசா கேட்டு விண்ணப்பித்த சங்கர் நேற்று கைது செய்யப்பட்டார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply