பயங்கரவாதத்துக்கு துணைபோகும் குழுவுடன் இணைந்து செயற்பட முடியாது : ஜயந்த கெடகொட

பயங்கரவாதத்திற்கு ஒத்துழைத்த கும்பலுடன் எமது கட்சி மீண்டும் கைகோர்த்துள்ளதால் அதிலிருந்து ஒதுங்கி ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தான் முடிவு செய்ததாக ஜனநாயகத் தேசிய முன்னணியின் முன்னாள் உபதலைவர் ஜயந்த கெடகொட எம்.பி. தெரிவித்தார். ஐ.ம.சு.மு. விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று பத்தரமுல்ல அபேகமவில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர், சரத் பொன்சேகாவிற்கிருக்கும் கெளரவம் குறைந்ததால் நான் அரசாங்கத்துடன் இணையவில்லை.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பயங்கரவாதத்திற்கு வக்காளத்து வாங்கும் கும்பலுடனே தனக்கு கைகோர்க்க நேரிட்டதாக சிறையிலிருந்த போது சரத் பொன்சேகா என்னிடம் கூறியிருந்தார்.

மீண்டும் அதே குழுவுடனே பொன்சேகா இம்முறையும் இணைய நேரிட்டுள்ளது. இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது. நாட்டை ஸ்தீரமற்ற நிலைக்குத் தள்ளுவதே இந்த குழுவின் முயற்சியாகும்.

சந்திரிகா குமாரதுங்கவின் மீள் வருகையுடன் பலரையும் அவர் பலிக்கடாவாக்கி வருகிறார். நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமராக வருவதே அவரின் நோக்கமாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply