ரஷ்ய அதிபர் இன்று இந்தியா வருகை
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்த பயணத்தின்போது அணு உலை, தொழில்நுட்பம் மற்றும் ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்டவை முக்கிய விவகாரமாக விவாதிக்கப்படும் என புதின் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் உறவை அதிகரிக்க விரும்புவதாக அவர் கூறினார். பாகிஸ்தானுடனான ராணுவ ஒத்துழைப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள புதின், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் போதை ஒழிப்பு நடவடிக்கையில் உதவுவது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் தெரிவித்தார். இரண்டு நாள் பயணமாக டெல்லி வரும் புதின், முதல் நாளான இன்று இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்கிறார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply