கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான சதி-ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதுதொடர்பாக எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூடி ஆலோசனை நடத்தின. அதில், ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து எண்ணெய் விலை வீழ்ச்சியை தடுக்க வேண்டும் என்று வற்புறுத்தின. ஆனால் அதை மற்ற நாடுகள் ஏற்கவில்லை. எண்ணெய் உற்பத்தி அதே நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் காரணமாக எண்ணெய் விலை மிகவும் சரிந்து வருகிறது. இதுபற்றி ஈரான் அதிபர் ஹசன்ரொகானி கூறியதாவது:–கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியில் மேற்கத்திய நாடுகளின் சதி இருப்பதாக கருதுகிறோம். விலை வீழ்ச்சியால் ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பீப்பாவுக்கு 100 டாலர் வரை விலை இருந்தால் மட்டுமே ஈரான் பட்ஜெட்டில் பிரச்சினை இல்லாமல் இருக்கும். ஆனால் விலை கடுமையாக குறைந்திருப்பதால் நாங்கள் கடுமையாக நெருக்கடியை சந்தித்து வருகிறோம்.
எண்ணெய் உற்பத்தியை குறைத்து விலையை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் விடுத்த கோரிக்கையையும் ஏற்கவில்லை. ஈரான் போன்ற நாடுகளை முடக்குவதற்காக சதி நடந்துள்ளது. இதன் காரணமாகத்தான் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply