அதுருகிரிய விமான விபத்தில் ஐவர் பலி
அன்டனோவ் 32 ரக விமானமொன்றே அத்துருகிரிய ஹோகந்தர பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 5.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஹோகந்தர கத்தரின் பார்க் பகுதியில் விமான விபத்து காரணமாக பாரிய சுவாலைகளுடன் தீப்பற்றிக் கொண்டுள்ளது.
தீயைக் கட்டு;ப்பாட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்கவிலிருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் நான்கு பேர் பயணித்துள்ளனர்.
ஹோகந்தரவில் இடம்பெற்ற விமான விபத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6.20 அளவில் அத்துருகிரிய ஹோகந்தர பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ்32 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கட்டுநாயக்கவிலிருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததாக விமான்படையினர் தெரிவித்தனர்.
விமான விபத்து காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளனர்.
விபத்தில் 5 பேர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply