ராணுவத்துடன் கடும் சண்டை: ஏமனில் புரட்சி ஏற்படும் அபாயம்-அதிபர் மாளிகையை கிளர்ச்சியாளர்கள் பிடித்தனர்
ஏமனில் கடந்த 2012–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் புரட்சி ஏற்பட்டது. அதை தொடர்ந்து சர்வாதிகாரியாக இருந்த அலி அப்துல்லா சலே பதவி விலகினார். அவரை தொடர்ந்து அப்தராபுக் மன்சூர் ஹாடி அதிபராக பதவி வகித்து வருகிறார்.இந்த நிலையில், ஷியா பிரிவை சேர்ந்த ‘ஹவுதீஸ்’ என்ற கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். அதிபர் ஹாடியும் அவரது அமைச்சர்களும் ஊழலில் திளைத்து நாட்டை சுரண்டி வருவதாக குற்றம் சாட்டினர்.எனவே, அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
அதை தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய 7 நகரங்களை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த நிலையில் சனாவில் நேற்று அதிபர் ஹாடி மாளிகையில் பார்வையாளர்களை சந்தித்து கொண்டிருந்தார்.அப்போது கிளர்ச்சியாளர்கள் திடீரென அதிபர் மாளிகை மீது வெடிகுண்டுகளை வீசி தாக்கினார்கள். இதனால் மாளிகைக்கு வெளியே கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு துப்பாக்கி ஏந்திய சிலர் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். அங்கு துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
இதற்கிடையே அதிபர் மாளிகையின் 3 வாயில்களையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி தங்கள் வசப்படுத்தினர்.தற்போது அதிபர் மாளிகை கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. இந்த தகவலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைவர் அப்துல் மாலிக்–அல்–ஹவுதி டெலிவிஷனில் தெரிவித்தார். அப்போது ஏமனில் அதிபர் ஹாடி உள்ளிட்ட தலைவர்கள் ஊழலில் திளைத்துள்ளனர். நாடும் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கிறது.அரசு நிர்வாகம் சீரழிந்து உள்ளது. ஹாடி அரசு அல்–கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளது. எனவே, அவர்கள் தூக்கி எறியப்பட வேண்டும் என்றார். அவரது உரை டெலிவிஷனில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.இதனால் 2012–ம் ஆண்டு நடந்தது போன்று ஏமனில் மீண்டும் புரட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது மாளிகை கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்தாலும் அதிபர் ஹாடி பத்திரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் இதுவரை இரு தரப்பை சேர்ந்த 9 பேர் பலியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது. பலர் காயம் அடைந்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply