வெலே சுதாவுடன் தொடர்பு பேணிய பா.உறுப்பினர், பொலிஸார் குறித்து விசாரணை!
போதைப்பொருள் வர்த்தகர் வெலே சுதாவிடம் இதுவரை நடத்திய விசாரணையில் அவருடன் தொடர்பு வைத்திருந்த ஆறு பேர் குறித்து தகவல் கசிந்துள்ளது. இந்த ஆறு பேரில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், பொலிஸ் அதிகாரிகள் மூவர், அரசியல் வாதியொருவரின் பிரத்தியேக செயலாளர் ஆகியோர் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அந்த ஆறு பேர் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக அவர் கூறினார்.
பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்ட வெலே சுதா என அழைக்கப்படும் கம்பொல விதானலாகே டொன் வசந்த குமார என்பவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று மாதங்கள் பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இவர்களிடம் நடத்திய விசாரணைகளின் பேரில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் கொள்வனவு செய்த சொத்தொன்றுக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்ட நிதிக்கும் இடையில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். எனினும் இது தொடர்பில் வெலே சுதா எதுவித தகவலும் இதுவரை வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டார்.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு 25 இலட்சம் ரூபா, 6 இலட்சம் ரூபா என பலதரப்பட்ட பெறுமதியிலான நிதி வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply