முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு : அமைச்சர் பா.டெனீஸ்வரன்
முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எமது மக்களின் விடிவிற்காக போராடி உயிர் நீத்த எமது போராளிகள் மற்றும் அரசியல் கைதிகள், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட எமது முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள்.அதனடிப்படையில், 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற வடமாகாண சபை வரவு செலவு கூட்டத்தில் முன்னாள் போராளிகளின் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தினை மீட்டெடுப்பதற்காக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. எனவே, அவர்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த வகையில், 2015 ஆம் ஆண்டில் மீன்பிடிமற்றும் போக்கவரத்து அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து, சுமார் 40 மில்லியன் ரூபா முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகள் குடும்பங்கள் பிள்ளைகளின் வாழ்வாதாரம், கல்விக்காக ஒதுக்கியுள்ளதாக அவர் கூறினார்.
இந்த குடும்பங்களுக்கு ஒதுக்கியுள்ள நிதி எந்த வித பாதகமான சூழ்நிலைகளையும் எதிர்நோக்குவதாக எவரும் சந்தேகம் கொள்ள வேண்டாமென அவர் கேட்டுக்கொண்டதுடன், அரசாங்கத்திற்கு எதிராக எந்த செயற்பாட்டினையும் முன்னெடுக்க வில்லை என்றும் அவர்கூறினார்.
அத்துடன், குறித்த நிதியினை முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும், முன்னாள் போராளிகளின் விபரங்கள் பெறப்பட்டு சரியான முறையில்தெரிவு செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்படும். 5 மாவட்டத்திலுமுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகளின் குடும்பங்களின் விபரங்களை தமது பிரதேசத்தில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் ஊடாக மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த பதிவுகளை மேற்கொண்ட பின்னர் மார்ச் மாதத்தில், இறுதி பகுதியில் இருந்து முன்ளர் போராளிகள் மற்றும் 800 அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான புனர்வாழ்வு அளிக்கப்பட்ட குடும்பங்களுக்கான சுயதொழில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுமென்று, இந்த செயற்திட்டங்கள் பாரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு, அவர்களின்வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு உதவுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply