பெண் தீவிரவாதியை விடுவிக்காவிடில் ஜோர்டான் விமானியை கொலை செய்வோம்: ஐ.எஸ்.தீவிரவாதிகள் மிரட்டல்

ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த ஜப்பானியர்களில் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். கென்ஜி கோடோ என்பவரும், ஜோர்டானை சேர்ந்த விமானி அல் – கஸாக்பே என்பவரும் தொடர்ந்து பிணைக் கைதிகளாக உள்ளனர்.இவர்களை உயிருடன் விடுவிக்க வேண்டுமானால் ஜோர்டான் சிறையில் மரண தண்டனை கைதி ஆக இருக்கும் பெண் தீவிரவாதி சஜிதா அல் – ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என ஐ.எஸ்.தீவிரவாதிகள் கெடுவிதித்து இருந்தனர்.
இதை தொடர்ந்து ஐப்பான் மற்றும் ஜோர்டான் அரசுகள் ரிஷாவி விடுதலைக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கென்ஜி கோமோ பேசுவது போன்று மற்றொரு வீடியோவை ஐ.எஸ்.தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

அதில், ரிஷாவியை விடுதலை செய்யாவிடில் ஜோர்டான் விமானி அல் – கஸோக்பே மற்றும் என்னையும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொன்று விடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தங்களது நாட்டு விமானியை காப்பாற்ற பெண் தீவிரவாதி ரிஷாவியை விடுவிக்க தயார் என ஜோர்டான் தெரிவித்துள்ளது. மேலும், அதற்கு முன்பாக விமானி இன்னும் உயிருடன் உள்ளாரா? என்பதற்காக ஆதாரத்தை வெளியிடுமாறு கோரியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply