நவாஸ் ஷெரிப் ஆட்சியை சுப்ரீம் கோர்ட் கலைக்க வேண்டும்: முஷரப் திடீர் பேட்டி

நாட்டை வழி நடத்த முடியாமல் திணறும் நவாஸ் ஷெரிப் ஆட்சியை கலைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கூறியுள்ளார். பாகிஸ்தானில் நல்லாட்சி நடைபெற வேண்டும். அந்த ஆட்சியை யார் வழங்குகிறார்கள்? என்பது முக்கியம் அல்ல. நல்லாட்சி உருவாகியே தீர வேண்டும் என்பதே எனது உளப்பூர்மான ஆசையாகும். மூன்றாவது அரசியல் சக்தி அமைய வேண்டும் என்பது இந்த நேரத்தின் கட்டாய தேவையாக உள்ளது.

நாட்டின் முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக இருக்குமேயானால் அரசியலமைப்பு சட்டத்தையே திருத்த வேண்டும். நாட்டை வழிநடத்த முடியாமல் திணறும் நவாஸ் ஷெரிப்பின் இயலாமை நிலையை கருத்தில் கொண்டு அவரது ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப சுப்ரீம் கோர்ட் முன்வர வேண்டும் என பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு பர்வேஸ் முஷரப் பேட்டியளித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply