மகாராணியின் அழைப்பில் ஜனாதிபதி லண்டன் பயணம்

எலிசபெத் மகாராணியின் விசேட அழைப்பினை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் 7ம் திகதி லண்டனுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். லண்டனுக்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி எலிசபெத் மகாராணியுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள் ளதுடன் மகாராணி அளிக்கும் பகல் போசன விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளவுள்ளார். மார்ச் 9ம் திகதி லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘பொதுநலவாய தினம்’ நிகழ்வுகளில் சிறப்பதிதியாகக் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு சிறப்புரை ஒன்றையும் ஆற்றவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றபின் லண்டனுக்கு விஜயம் செய்யும் முதலாவது விஜயம் இதுவாகுமெனவும் அவர் மார்ச் 12 வரை அங்கு தங்கியிருந்து அரசி யல், வர்த்தக மற்றும் பல்துறை சார்ந் தவர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply