முல்லைத்தீவில் தேர்தல் ஒத்திவைப்பு உயர் நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக் குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தலை இடை நிறுத்த உயர் நீதிமன்றம் இடைக் கால தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனையடுத்து இரு பிரதேச சபைகளுக்குமான தேர்தல் பிற்போடப் பட்டுள்ளது. மேற்படி பிரதேச சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறவிருந்ததுடன் தேர்தலை மார்ச் 27ம் திகதி வரை நடத்தக்கூடாதென உயர் நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு பிறப்பித்ததற்கமைய இரு பிரதேச சபைகளுக்குமான தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல் தொடர்பில் இருவர் தாக்கல் செய்திருந்த மனுவை நேற்று விசாரணைக்குட்படுத்தியிருந்த உயர் நீதிமன்றம் மேற்படி தடையுத்தரவைப் பிறப்பித்திருந்ததாகவும் இதற்கிணங்க தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதித் தேர்தல் ஆணையாளர் எம். எம். மொகமட் தெரிவித்தார்.

மேற்படி இரு பிரதேச சபைகளுக்குமான தேர்தல் இன்று நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டு நேற்றைய தினம் வாக்குப் பெட்டிக ளைக்கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அச்சந்தர்ப்பத் திலேயே நேற்று நண்பகல் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு நடைபெறவிருந்ததுடன் மக்கள் வாக்களிப்பதற்காக 95 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு ஒன்பது உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 29279 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். அத்துடன் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்காக 23559 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையில் பதினொரு உறுப்பினர்கள் தெரிவாகவிருந்ததுடன் இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, பிரஜைகள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய ஆறு அரசியல் கட்சிகள் போட்டியிடவிருந்தன. இதற்கென 90 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியிருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு 9 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய ஐந்து அரசியல் கட்சிகள் மற்றும் ஒரு சுயேச்சைக் குழுவின் சார்பில் 72 வேட்பாளர்கள் களத்தில் இறக்கியிருந்தனர். இங்கு நவசமசமாஜக் கட்சியும் போட்டியிடவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் 2012 ஆம் ஆண்டு வேட்புமனுத் தாக்கலின் அடிப்படையில் இந்த தேர்தல் நடத்தப்படவிருந்தமையால் கடந்த மூன்று வருடங்களில் பல கட்சிகளில் போட்டியிட இருந்த வேட்பாளர்கள் வெளிநாடு சென்றுள்ளதுடன், இன்னும் சிலர் கட்சி மாறியிருக்கிறார்கள். இன்னும் சிலர் தாம் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று எழுத்து மூலம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளனர்.

மட்டுமன்றி, கடந்த 2012 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுத் தாக்கலின் அடிப்படையில் த. தே. கூ சார்பில் போட்டியிட்ட இருவர் மாகாண சபைக்கு போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினர்களாகியுள்ளனர்.

அத்துடன் பழைய வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளதால் புதிதாக தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இனிவரும் 2019 ஆம் ஆண்டே தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பமும் கிடைக்கும்.

எனவே தான் குறித்த தேர்தலை இடை நிறுத்திவிட்டு புதிய வேட்பு மனுத்தாக்கல் செய்து மீளவும் தேர்தலை நடத்துமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதாக முல் லைத்தீவு மாவட்டத்தின் புத்திஜீவிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்கள் ஏ. மபூஸ் அஹமட் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று நடைபெற இருந்த தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளை யும் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் செயலகம் முன்னெடுத்திருந்தது. நேற்று வெள்ளிக்கிழமை காலை முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திலிருந்து கரைத்து றைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள சகல வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப் பெட்டிகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டதுடன், பெருமளவிலான பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply