நிலத்தடிநீர் மாசுபடுவதற்கு நொர்தேன் பவர் மின் உற்பத்தி நிறுவனம் காரணமில்லையாம் : முகாமையாளர் இராஐகுரு
யாழ்ப்பாணத்தின் நிலத்தடிநீர் மாசுபடுவதற்கு நொர்தேன் பவர் மின் உற்பத்தி நிறுவனம் காரணமில்லை என்று அடியோடு மறுத்துள்ள மேற்படி நிறுவனம் தாம் இங்கு வந்து செயற்படுவதற்கு முன்னதாக இங்குள்ள நிலத்தடி நீர்மாசுட்டுள்ளதாகவும் நொர்தேன் பவர் மின் உற்பத்தி நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் இராஐகுரு தெரிவித்துள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் இன் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலையே இராஐகுரு மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்.. தமது நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் ஊகங்களின் அடிப்படையிலையே முன்வைக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கும் மேற்படி நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் எஸ்.இராஐகுரு விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலமாகவே உண்மைகளை அறிந்து இதற்குத் தீர்வை ஏற்படுத்த முடியுமென்றும் இந்த ஆய்வு அறிக்கைகள் விரைவாக வெளியிடப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது பாரி பிரச்சனையாக தண்ணீர் பிரச்சனை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கு பலரும் பல காரணங்களைக் கூறி வருகின்றனர். ஆனால் அந்தக் காரணங்களின் உண்மைகளை அல்லது உறுதிப்பாடுகளை யாரும் வெளியிடுவதில்லை.
குறிப்பாக வலிகாமம் வடக்கு, தெற்கு உள்ளிட்ட யாழ்ப்பாணம் முழுவதும் நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு எமது நொர்தேன் பவர் மின் உற்பத்தி நிலையமே காரணமென்றும் கூறுகின்றனர். அவ்வாறு ஊகங்களின் அடிப்படையில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டக்களை நாம் அடியோடு மறுக்கின்றோம்.
கடந்த 2009 ஆம் ஆண்டு நாம் இங்கு எமது சேவைகளை ஆரம்பித்திருந்தோம். அதே போன்று எமது மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகாமையில் இலங்கை மின்சார சபையினரும் செயற்பட்டு வருகின்றனர். மேலும் இதற்கு முன்னரும் மின் உற்பத்திப ல ஆண்டுகளாக இங்கு இடம்பெற்றிருக்கின்றது.
இவ்வாறு பல உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலைமைகள் இருக்கின்றது. அதே வேளையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அதாவது நாம் இங்கு வந்து சேவைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே சுன்னாகம் பகுதியிலுள்ள மக்கள் தமது பிரதேச குடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அன்றைய மாவட்ட அரசாங்க அதிபர் கணேசிற்கும் கடிதம் அனுப்பி வைத்திருக்கின்றனர். இவ்வாறு அங்கு ஆரம்பத்திலேயே பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது. ஆனால் இதனைத் தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறான நிலையில் எமது நிறுவனத்தின் மீது ஊகங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டக்களை முன்வைக்கின்றனர்.
ஆனால் இத்தகைய குற்றச்சாட்டக்கள் எதற்காக முன்வைக்கப்படுகின்றது என்று எமக்குத் தெரியாது. ஆனால் இந்த நிறுவனத்துடன் எந்த அரசியலுக்கும் அரசில்வாதிகளுக்கும் தொடர்பில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
அதே வேளையில் இங்கு நிலத்தடி நீர் மாசுபட்டிருக்கின்றது என்பதனை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அதற்கு எமது நிறுவனம் காரணம் என்று கூறுவதை மறுக்கின்றோம். மேலும் ஊகங்களின் அடிப்படையில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டக்களையும் ஏற்றுக்ககொள்ளவில்லை.
ஆகவே விஞ்ஞான ரீதியானதொரு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோருவதுடன் அதனை விரைவாக மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply