நைஜீரியாவில் போகோஹாரம் தீவிரவாதிகள் மீண்டும் அட்டூழியம்: குழந்தைகள் உட்பட 68 பேர் சுட்டுக்கொலை

நைஜீரியாவை சேர்ந்த தீவிரவாத இயக்கமான போகோஹாரம், கடந்த செவ்வாய்கிழமை அந்நாட்டு வடகிழக்கு பகுதியில் உள்ள கிராமத்தின் மீது நடத்திய தாக்குதலில் அக்கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட 68 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கிராமம் நஜபா. கடந்த செவ்வாயன்று காலை, அக்கிராம மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கும் போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த போகோஹாரம் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அக்கிராமத்தை சேர்ந்த 68 பேர் கொல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த கிராமவாசிகள் இருவர் தெரிவித்தனர்.இந்த கொடூர தாக்குதலில் தனது நான்கு பேரக் குழந்தைகளை பறிகொடுத்த பெண், இனிமேல் ஒருபோதும் அக்கிராமத்திற்கு திரும்ப போவதில்லை என்று வேதனையுடன் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply