செஷல்ஸ் நாட்டில் மோடிக்கு வரவேற்பு
அரசு முறைப் பயணமாக செஷல்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. செஷல்ஸ் அதிபரை சந்தித்து பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற மோடி, நேற்றிரவு செஷல்ஸ் நாட்டை அடைந்தார். செஷல்ஸ் அதிபர் ஜேம்ஸ் அலெக்சிஸ் மற்றும் துணை அதிபர் டேனி ஆகியோர் பிரதமர் மோடியை நேரில் வரவேற்றனர். பிரதமர் மோடியைக் காண்பதற்காக இரவு நேரத்திலும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
அவர்களுடன் கைகுலுக்கிய மோடி, வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார். செஷல்ஸ் அதிபர் அலெக்சிஸ் உடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இன்று பேச்சு நடத்தும் பிரதமர் மோடி, பின்னர் மொரிஷியஸ் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். மொரிஷியஸின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். அதன் தொடர்ச்சியாக 13ம் தேதி, பிரதமர் மோடி இலங்கைக்கு செல்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply