ஜனா­தி­ப­திக்கு பாகிஸ்­தானில் செங்­கம்­பள வர­வேற்பு

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மூன்று நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு நேற்று மாலை பாகிஸ்­தானை வந்­த­டைந்தார். கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் பய­ணிகள் விமானம் மூலம் கராச்சி ஜின்னா சர்­வ­தேச விமான நிலை­யத்தை வந்­த­டைந்த ஜனா­தி­பதி தலை­மை­யி­லான குழு­வி­னரை சிந்து மாகா­ணத்தின் ஆளுநர் இஷ்ரத் உல் இபாத் கான் மற்றும் பாகிஸ்­தா­னுக்­கான இலங்கை உயர் ஸ்தானிகர் எயார் மார்ஷல் ஜயலத் வீரக்­கொடி ஆகியோர் வர­வேற்­றனர்.

அங்­கி­ருந்து விசேட விமானம் மூலம் இஸ்­லா­மாபாத் நூர் கான் விமான தளத்தை வந்­த­டைந்த ஜனா­தி­பதி மற்றும் அமைச்­சர்கள் அடங்­கிய தூதுக் குழு­வி­னரை பாகிஸ்­தானின் சிரேஷ்ட அமைச்­சர்கள் வர­வேற்­றனர். இதன் போது 21 வேட்­டுக்கள் தீர்க்­கப்­பட்டு ஜனா­தி­ப­திக்கு அரச மரி­யாதை செலுத்­தப்­பட்­டது.

அங்­கி­ருந்து தூதுக் குழு­வினர் தங்­கி­யி­ருக்கும் ஹோட்டல் சரே­னாவை வந்­த­டைந்த ஜனா­தி­ப­தியை பாகிஸ்­தா­னி­லுள்ள இலங்கை தூத­ரக அதி­கா­ரிகள் வர­வேற்­றனர். அத்­துடன் இலங்கை தூத­ர­கத்தின் ஏற்­பாட்டில் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான தூதுக் குழு­வி­ன­ருக்கு இராப்­போ­சன விருந்­து­ப­சா­ரமும் அளிக்­கப்­பட்­டது.

ஜனா­தி­ப­தி­யுடன் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, கைத்­தொழில் வணிக அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன், அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி ஆகி­யோரும் பாகிஸ்­தா­னுக்கு விஜயம் செய்­துள்­ளனர்.

அத்­துடன் இரா­ணுவ தள­பதி லெப்டின்ன்ட் ஜெனரல் ஏ.டபிள்யூ.ஜே. கிரி­ஷாந்த டி சில்வா, வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் திரு­மதி சித்­ராங்­கனி வாகிஸ்­வரா, தொலைத்­தொ­டர்பு ஒழுங்­கு­ப­டுத்தல் ஆணைக்­கு­ழுவின் பணிப்­பாளர் நாயகம் எம்.எம்.ஸுஹைர் உட்­பட 40 பேர் அடங்­கிய இலங்கை தூதுக் குழு­வினர் பாகிஸ்­தா­னுக்கு விஜயம் விஜயம் மேற்­கொண்­டுள்­ளனர்.

இலங்கை ஜனா­தி­ப­தியின் வரு­கையை முன்­னிட்டு பாகிஸ்­தானின் தலை­நகர் இஸ்­லா­மா­பாத்தில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஜனாதிபதியை வரவேற்கும் வகையிலும் இலங்கை மற்றும் பாகிஸ்தானின் உறவை பிரதிபலிக்கும் வகையிலும் இஸ்லாமாபாத் நகர் முழுவதும் பாரிய கட் அவுட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply