ஈராக்கில் கொன்று புதைக்கப்பட்ட 1700 ராணுவ வீரர்கள் உடல்கள் மீண்டும் தோண்டியெடுப்பு

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முதன் முதலில் அந்நாட்டின் 2–வது பெரிய நகரமான திக்ரித்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைப்பற்றினர். இது முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊராகும். ஐ.எஸ். தீவிரவாதிகள் திக்ரித்தை கைப்பற்றிய போது அங்கிருந்த அதிபர் மாளிகையில் 1700 ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்தனர். அவர்களை பிணைக் கைதிகளாக சிறை பிடித்தனர்.

அதன் பின்னர் தான் அப்பகுதியில் பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சிறைபிடித்த ராணுவ வீரர்களின் கைகளை பின்புறமாக கட்டி கும்பல் கும்பலாக சுட்டுக் கொன்றனர்.

அவர்களின் உடல்களை லாரிகளில் அள்ளி எடுத்து சென்று ஒரே இடத்தில் புதைத்தனர். பலரது உடலை அதிபர் மாளிகையின் முன்புறம் ஓடும் டைகிறிஸ் ஆற்றில் வீசினர். அந்த வீடியோக்களை ஏற்கனவே வெளியிட்டனர்.

தற்போது திக்ரித் நகரை ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளது. எனவே, கொன்று புதைக்கப்பட்ட 1700 ராணுவ வீரர்களின் உடல்களை மீட்கும் பணி தொடங்கியுள்ளது.

திக்ரித் நகரில் ராணுவ வீரர்களின் உடல்கள் அதிபர் மாளிகையில் புதைக்கப்பட்டதாக கருதப்படும் அதிபர் மாளிகையில் 8 இடங்களில் தோண்டும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தகவலை ஈராக் மனித உரிமைகள் அமைச்சக அதிகாரி கமில் அமின் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply