எத்தகைய தடைகள் வரினும் மக்களுக்கான அபிவிருத்திகள், நிவாரணம் நிறுத்தப்படாது : ரவிகருணாநயாயக்க  

எதிர்க்கட்சியினர் எத்தகைய தடைகளைப் போட்டாலும் மக்களுக்கான அபிவிருத்தியோ நிவாரணங்களோ நிறுத்தப்படமாட்டாது என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 4000 பில்லியன் ரூபா தொடர்பான சட்டமூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே முன்வைக்கப்பட்டது. எனினும் எதிர்க்கட்சியினர் உட்பூசலைப் பயன்படுத்தி மக்களின் நிவாரணத்திற்கே தடை போட்டுள்ளனர் என்பதை சகலரும் உணர வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். எந்தவித வரி அதிகரிப்பையும் மேற்கொள் ளாமலேயே அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகின்றது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கர்ப்பிணித் தாய்மாருக்கு 20,000 ரூபா பெறுமதியான சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ் நேற்று கொழும்பு மாவட்ட கர்ப்பிணித்தாய்மாருக்கு சத்து ணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. பத்தரமுல்லை கலாகேந்ரா மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிறப் பதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ரோஸி சேனாநாயக்க, விஜேதாச ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக் கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத் தப்பட்டு வருவதை அனைவரும் காண முடியும்.

எவ்வித அரசியல் நோக்கமுமின்றி அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக புதிய அரசாங்கமானது சிறுவர் மற்றும் மகளிர் நலன்கள் தொடர்பில் பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது. அதற்கிணங்கவே தனித்தனி அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு அம்சமாகவே மந்த போசனத்தை நிவர்த்திக்கும் திட்டங்களை மேற்கொண்டுள் ளோம்.

அதேவேளை, இதுவரை காலமும் பிரசவ விடுமுறையாக முதல் இண்டு குழந்தைகள் பிரசவத்திற்கே 84 தினங்கள் விடுமுறை வழங்கப்பட்டன. அதை மாற்றி இனி மேல் அதற்கடுத்தடுத்த 3ம், 4ம் பிள்ளைகளின் பிரசவத்தின் போதும் மேற்படி விடு முறையைத் தாய்மாருக்கு வழங்க நாம் தீர்மானித்துள்ளோம். இதனைச் சட்டபூர்வ மாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களுக்கு இது பொருந்தாது.

நாம் மக்களுக்கு வழங்கக்கூடிய நிவார ணங்களையும் வழங்கி எரிபொருள், கேஸ் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் குறைத்துள்ளோம். பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முறையான வழி முறைகளைக் கையாள் கின்றோம்.எத்தகைய வரி அதிகரிப்பையும் மேற்கொள்ளாமலேயே அரசாங்கம் மக்களுக்கு இந்தளவு நிவாரணங்களை வழங்கி வருகின்றது. இதுவே எம்மால் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம். வீண் விரயங்களை இல்லாதொழித்து அதன் பலன்களை நிவாரணமாக மக்களுக்கு வழங்குகின்றோம்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நாம் 4000 பில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்வதற்கான சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தோம். எனினும் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிவு செய்யும் சர்ச்சையினால் இதனை அரசிலாக்கி அதற்கு எதிராகச் செயற்பட்டனர். இதனால் மக்களுக்கான நிவாரணங்களையே அவர்கள் தடை செய்துள்ளனர் என்பதை சகலரும் உணர வேண்டும்.

விமல் வீரவன்ச தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார போன்றோரிடம் நான் கேட்க விரும்புகிறேன் இந்த சட்டமூலத்தை எதிர்த்ததன் மூலம் அப்பாவி மக்களுக்குக் கிடைக்கக்கூடிய நிவாரணங்களே தடைப்படும் என்பதை அவர்கள் உணரவில்லையா? நாம் மக்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணங்களைத் தொடர்ந்தும் வழங்கி வந்துள்ளோம். சம்பள அதிகரிப்பை மேற்கொண்டோம். சமுர்த்தி உதவி பெறுவோரின் தொகையை அதிகரித்தோம். விவசாயிகளின் உற்பத்தியை அதிக விலைக்குக் கொள்வனவு செய்து வருகிறோம்.

இது போன்ற செயற்பாடுகளை நிறுத்தும் நோக்கிலேயே எதிர்க் கட்சியினர் தடைகளை ஏற்படுத்துகின்றனர்.இத்தகையோருக்கு நாம் கூறுவதெல்லாம் இதுபோன்ற தடைகளை ஏற்படுத்தி அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை ஒருபோதும் நிறுத்த முடியாதென்பதே.நாம் ஊழல் மோசடிகளை இல்லா தொழித்துள்ளோம். சிலரது பைகளுக்குள் சென்றடைந்த பணத்தை மக்கள் அனுபவிக்கும் வகையில் பகிர்ந்தளித்துள் ளோம்.

மக்களுக்கு நாம் கூறுவதெல்லாம் இன்றைய விட சிறந்த நாளையை நாம் நாட்டில் உருவாக்குவோம். நாட்டில் தற்போது அதற்கான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புதிய அரசாங்கத்திற்கு 88 நாட்களே முடிவடைந்துள்ள நிலையில் 12 வருடங்களில் செய்ய முடியாதவற்றை இந்த குறுகிய காலத்தில் நாம் செய்து முடிந்துள்ளோம். எதிர்கால சுபூட்சத்திற்காக நாம் அனைவரும் கைகோர்த்துச் செயற்படுவோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply