எனது கணவரை கடத்தியது அந்தக் கருணா குழுவினரே ஆணைக்குழு முன் யுவதி சாட்சியம்

கண்ணமுத்து சத்தியநாதன் எனும் தனது கணவரை, 2008ஆம் ஆண்டு கருணா குழுவினர் அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் தனது கணவர் காணாமல் போய்விட்டதாகவும், விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த புவிராஜன் சசிகலா என்பவர் காணாமல் போனோரை கண்டறி வதற்கான ஆணைக்குழுவின் அமர்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றபோது சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார்.

வீரையடி வீதி விநாயகபுரம் எனும் முகவரியைச் சேர்ந்த மேற்படி பெண் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி பிற்பகல் 3.00 மணியளவில் எமது வீட்டுக்கு கருணா குழுவைச் சேர்ந்த சிலர் வந்து விசாரணையொன்றின் நிமித்தம் தேவைப்படுவதாகக் கூறி, எனது கணவரை அழைத்துச் சென்றனர். அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட எனது கணவர் இன்றவரை திரும்பவில்லை. கருணா குழுவினரின் அலுவலகமொன்று எமது வீட்டுக்கு அருகாமையில் இருந்தது. அங்கு சென்று, எனது கணவர் பற்றி விசாரித்தேன். ஆ¡ல், அவர்கள் எதுவித தகவலையும் கூறாமல் என்னை விரட்டிவிட்டனர்.

எனது கணவரை அழைத்துச் சென்றவர்களில் தயாபரன் என்கிற நபரொருவரும் இருந்தார். அவரும் கருணா குழுவைச் சேர்ந்தவர். தயாபரன் எனும் அந்த நபர், தற்போது ஆலையடிவேம்புப் பகுதியில் திருமணம் செய்துள்ளதாக அறிகிறேன்.

என்னுடைய கணவரை கருணா குழுவினர் அழைத்துக் கொண்டு சென்றமையை எனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்ணமுத்து, வித்தியாபதி ஆகியோரும் கண்டுள்ளார்கள். எனது கணவர் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தேன். எங்கள் பகுதியில் கருணா குழுவினர் இருந்த அலுவலகமும் இப்போது இல்லை என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply