அஸ்கிரிய மகாநாயக்கரின் இறுதிக்கிரியை இன்று தேசிய துக்க தினமாக அரசாங்கம் பிரகடனம்
அஸ்கிரிய பீட த்தின் மஹா நாயக்க அதி. வண. உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இன்று 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் நடைபெறும். இறுதிக் கிரியைகள் நடைபெறும் போது இராணுவத்தினரின் மரியாதை வேட்டுகளும் தீர்க்கப்படுவதுடன் இன்று தேசிய துக்க தினமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.
சகல அரச மற்றும் தனியார் கட்டடங்களில் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும் அதேநேரம், பெளத்த விகாரைகள். வீடுகளில் மஞ்சள் நிற கொடியை பறக்கவிடுமாறும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
அஸ்கிரிய மஹாநாயக்கரின் பூதவுடல். அஸ்கிரிய விகாரையின் மண்டபத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தகனக் கிரியைகள் நடைபெறும் போது ஹெலிகொப்டரிலிருந்து மலர்கள் தூவுவதற்கான ஏற்பாடுகளையும் விமானப் படையினர் செய்துள்ளனர். அன்னாரது தகனக் கிரியைகளில் கலந்து கொள்வதற்கு வெளிநாட்டு தூதுவர்களுக் கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளி நாடுகளிலிருந்து பெளத்த பிக்குமார்கள் உட்பட 40 இற்கும் அதிகமான வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். இன்றைய இறுதிக் கிரியை நிகழ்வுகள் முதல் தகனக் கிரியை முடிவடையும் வரையான அனைத்து நிகழ்வுகளும் ரூபவாஹினி அலைவரிசையில் நேரடி ஒளிரப்பு செய்யப்படும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply