அப்பட்டமான பொய் ஆதாரமற்ற குற்றச்சாட்டு முரளிதரன் எம்.பி. முற்றாக மறுப்பு

விநாயகபுரத்தைச் சேர்ந்த சகோதரி புவிராஜன் சசிகலா காணாமல் போனோரை கண்டறிவதற்கான ஆணைக் குழுவின் அமர்வில் சாட்சியமளித்த போது எனது பெயரைக் குறிப்பிட்டு என்மீது குற்றஞ் சாட்டயிருக்கிறார். அவர் குறிப்பிட்ட காலத்தில் உண்மையில் நான் இலங்கையிலேயே இருக்கவில்லை. அப்படியிருக்க சகோதரி ஏன் அவ்வாறு கூறினாரோ தெரியவில்லை. இது அப்பட்டமான பொய், ஆதாரமற்ற குற்றச்சாட்டு, தனது பெயரைக் கெடுப்பதில் சிலர் கங்கணம் கட்டிக் குறியாகச் செயற்பட்டு வருகின்றனர். அத்தகையதொரு சூழ்ச்சியாகவும் இது இருக்கலாம் என விநாயகமூர்த்தி முளிதரன் எம்.பி. தெரிவித்தார். சகோதரி சசிகலா மட்டுமல்ல முன்னாள் எம்.பி. சந்திரநேருவின் புதல்வரும் என்மீது இவ்வாற்தான் குற்றஞ்சாடினார்.

அதுவும் திட்டமிட்ட பொய்யானதொரு குற்றச்சாட்டு உண்மையில் இந்த ஆணைக்குழு முன்பாக நானாக முன்வந்து பல உண்மைகளை முன்வைத்தேன். அவை பதிவில் உள்ளது. முதலில் என்னை கருணா குழு என அழைப்பதை நிறுத்த வேண்டும். அத்தகையதொரு குழு என்னிடம் எப்போதும் இருக்கவில்லை. நான் 2004 ஆம் ஆண்டு புலிகள் அமைப்பிலிருந்து விலகியது முதல் தனித்து எனது போக்கில் எனது தனிப்பட்ட வாழ்க்கைக்காக இயங்கி வருகிறேன்.

பின்னர் தேசியக் கட்சியான சுதந்திரக் கட்சியில் இணைந்து அதன் உயர் பதவியில் அமர்ந்து அமைச்சர் பதவியை வகித்து மக்களுக்குச் சேவை செய்து வந்தேன். இப்போதும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் சேவை புரிகின்றேன். காணாமல் போனோருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நானும் கவலைப்படு கிறேன். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் நான் அங்கம் வகிக்கவே இல்லை. என்னை அக்கட்சியுடன் தொடர்புபடுத்துவது முற்றிலும் தவறானது எனவும் முரளிதரன் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply