தண்ணீரில் அரசியலை கலக்க வேண்டாம் தேசிய புலமைசாலிகள் ஒன்றியம்

சுன்னாகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் உள்ள குடிநீரில் கழிவு எண்ணெய் கிஅஸ் என்பன கலந்திருப்பது கண்டுபிடிக்க ப்பட்டதாக தெரிவித்துள்ள தேசிய புலமைசாலிகள் தொழில் வல்லுனர்கள் ஒன்றியம் இப் பிரச்சினையை அரசியலாக்காமல் அதற்கான தீர்வை முன்வைப்ப தற்கான குழுவை அரசாங்கம் நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தது. ஒன்றியம் இதுபற்றி தெரிவித்திருப்பதாவது கடந்த பல வருடங்களாக தேசிய புலமைசாலிகள் தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் மக்களுடைய பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுத்து வருகின்றது. குறிப்பாக சுன்னாகம் மற்றும் அதனை சூழவுள்ள கிணறுகளில் எண்ணெய் கலந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சினை சம்பந்தமாக ஆய்வு நடத்திய வட மாகாண சபையின் நிபுணர்குழு அந்த தண்ணீரில் பார உலோகங்கள். கழிவு எண்ணெய் படிமங்கள் இல்லை என்று ஊடக அறிக்கை விடப்பட்டுள்ளது. இது மக்களின் பார்வைக்கு விடப்படவில்லை.

இந்தப் பிரச்சினை சம்பந்தமாக எமது ஒன்றியம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி எண்ணெய் கிறிஸ் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள குடி தண்ணீர் பிரச்சினையை அரசியலாக்காது அதில் தலையிடும் அரசியல்வாதிகள் தமக்கு ஏற்றவர்களை வைத்து ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிடுவது நிறுத்தப்படல் வேண்டும்.

சுன்னாகம் தண்ணீர் பிரச்சினையைப் பொறுத்தவரையில் முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் பொறுப்புவாய்ந்த ஒரு குழுவை நியமித்து அதன் மூலம் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான ஆய்வை நடத்தியவர்களையும் ஆய்வையும் இறுதி அறிக்கையையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மக்களுக்கு எழும் சந்தேகங்களை அந்த குழு ஊடாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply