சகலரும் நல்லெண்ணத்துடன் நல்வாழ்வு வாழப் பிரார்த்திக்கிறேன் : அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்
சகல இன மக்களும் நல்லெண்ணத்துடன் நல்வாழ்வு வாழப் பிரார்த்திக்கிறேன் புலர்ந்துள்ள புத்தாண்டில் சகல இன மத, மக்களும் நல் எண்ணத்துடன் நல்வாழ்வு வாழ கொழும்பு ஸ்ரீ சிவகாம செளந்தரி அம்பிகையுடனான ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரப் பெருமானை வணங்குவதாக மீள் குடியேற்றம், புனர் நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது-
மன்மத வருஷ புத்தாண்டு குறிப்பாக வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு ஒரு முக்கியமான வருஷமாக அமைகின்றது. இவ்வளவு காலமும் அவர்கள் தமது சொத்துக்கள், பூமிகள், உடைமைகளை இழந்து பெரும்துன்ப வாழ்வை வாழ்ந்து வந்தனர். இலங்கை வாழ் இந்துப் பெருமக்கள் முன்னைய ஆண்டுகளிலும் பார்க்க இவ்வாண்டு பெருமகிழ்ச்சியுடன் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.
புதிய அரசு முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளுக்கமைய வடக்கு, கிழக்கு மக்களின் ஒரு பகுதியினர் தமது சொத்துக்களை மீளப் பெற்று வருகின்றனர். அதற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நான் அவர்களின் துயர்போக்க அவர்களின் உடைமைகளை மீளவும் அவர்களுக்கே கொடுக்க ஆவணை செய்தேன்.
ஆதலால் இன்றைய மன்மத புத்தாண்டின் காலை வேளையில் எல்லா இல்லங்களிலும் பொங்கல் வழிபாடு இடம்பெறும் போது மீள்குடியேற்றம் பெற்ற மக்கள் இல்லங்களிலும் பால் பொங்குவது ஒரு தேவ ஆசியாகும்.
அல்லற்பட்டு, அவதியுற்று உடைமைகளை இழந்த மக்கள் புதிய அரசின் ஆட்சியின் கீழ் நிம்மதி பெருமூச்சுடன் வாழ வழியமைத்தது போல் மலர்ந்துள்ள புத்தாண்டிலும் அனைவருக்கும் சகல பாக்கியங்களும் கிடைக்க ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரரை வேண்டுகின்றேன் என தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply