கச்சத்தீவைத் திருப்பித்தர முடியாது அமைச்சர் லட்சுமணன் சேனவிரத்னே
கச்சத்தீவைத் திருப்பியளிக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று இலங்கை அமைச்சர் லட்சுமணன் சேனவிரத்னே தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவு ஒரு ஒப்பந்தம் வாயிலாக இலங்கைக்கு இந்தியாவால் அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார். அதைத் திருப்பியளிக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று லட்சுமணணன் சேனவிரத்னே கூறினார். இலங்கையில் வசிக்கும் அனைத்து சிறுபான்மையினரின் நலனுக்காகவும் தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்த அவர், இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்ற பின், இந்திய, இலங்கை உறவில் முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறினார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply