இத்தாலி அருகே மீண்டும் அகதிகள் படகு மூழ்கியது: 20 பேர் பலி

லிபியாவில் உள்நாட்டு போர் மற்றும் கிளர்ச்சி படையினரின் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் அங்கிருந்து மக்கள் அகதிகளாக வெளி யேறுகின்றனர். அனுமதியில்லாத படகுகள் மூலம் திருட்டுத்தனமாக புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். சமீபத்தில் லிபியாவில் இருந்து 700 பேருடன் வந்த படகு இத்தாலியில், மத்திய தரைக்கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்த 400 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.

இந்த நிலையில் லிபியாவில் இருந்து வந்த மற்றொரு படகு மத்திய தரைக்கடலில் மூழ்கியது. அந்த படகில் பயணம் செய்த அகதி ஒருவர் ரோம் நகரில் உள்ள சர்வதேச குடியுரிமை அலுவலகத்துக்கு டெலிபோனில் பேசினார்.

லிபியாவில் இருந்து 3 படகுகளில் அகதிகள் வந்துள்ளதாகவும், அதில் ஒரு படகு கடலில் மூழ்கியதாகவும் தெரிவித்தார். மூழ்கி கொண்டிருக்கும் படகில் 20 பேர் கடலில் மூழ்கி பலியாகி விட்டதாகவும் தெரிவித்தார்.

உடனே மீட்பு குழுவினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். மத்திய தரைக்கடல் பகுதியில் அகதிகள் படகுகள் அடிக்கடி மூழ்கி உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டில் (2015) மட்டும் இதுவரை 1600 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அதை தடுக்க அகதிகளை சட்டவிரோதமாக அழைத்து வரும் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க இத்தாலி அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே கிரேக்க நாட்டின் ரோதஸ் தீவில் நேற்று அகதிகளை ஏற்றிவந்த படகு ஒன்று கடலில் மூழ்கியது. இதில் 3 பேர் பலியாகினர். அந்த படகில் 80 பேர் பயணம் செய்தனர். அப்படகு துருக்கியை கடந்து வந்தபோது கடலில் மூழ்கியது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply