பாகிஸ்தானில் ராணுவ விமானங்கள் சரமாரி குண்டு வீச்சு: 20 தீவிரவாதிகள் சாவு
வடமேற்கு பாகிஸ்தானில் பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் கைபர் ஏஜென்சி பகுதியில் ராணுவம் இன்று நடத்திய விமான தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் தீவிரவாதிகளை ஒழிக்கும் ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது. அந்த வகையில், கைபர் ஏஜென்சியின் திராஹ் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் பகுதியை நோக்கி விமானங்கள் இன்று துல்லியமாக குண்டுகளை வீசி தாக்கின.இந்த தொடர் தாக்குதலில், தீவிரவாதிகளின் மறைவிடங்கள், அவர்களின் ஆயுதங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 3 தற்கொலைப்படை தீவிரவாதி உள்பட 20 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் தொடர்வதால் தீவிரவாதிகளின் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply