அதிபர் பதவிக் காலத்தை குறைக்கும் சட்டம்: சிறிசேனா வேண்டுகோள்

இலங்கை அதிபரின் பதவிக் காலம் மற்றும் அதிகாரத்தைக் குறைக்கும் 19வது அரசியல் சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டுமென அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை அதிபரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அதிபரின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கவும், அதிபரின் அதிகாரத்தைக் குறைக்க வகை செய்யும் 19வது சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர அதிபர் மைத்ரிபால சிறிசேனா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.

சட்டத்திருத்தத்தைக் கொண்டுவருவது எளிதான காரியமல்ல என்று கூறியுள்ள அவர், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள 19வது சட்டத்திருத்தத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிக்குமாறு அதிபர் சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது ஆட்சியில் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எந்த வகையிலும் இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply