மைத்திரி – மஹிந்த சந்திப்பு ரத்து மே மாதம் நடைபெறும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் இன்று (25) நடைபெற இருந்த சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தில் இருவரும் சந்தித்து கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து பேச இருப்பதாக முன்னாள் அமைச்சர் குமாரவெல்கம எம்.பி. தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் டீ.பி. ஏக்கநாயக்கவும் நானும் ஜனாதிபதியை சந்தித்தோம். கட்சிக்குள் தற்பொழுதுள்ள நெருக்கடி நிலை குறித்து பேசினோம்.
ஜனாதிபதியையும் முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க வைக்க முயற்சி செய்தோம். அதற்கு ஜனாதிபதி இணங்கினார். முன்னாள் ஜனாதிபதி 25ஆம் திகதி மாலை 7 மணிக்கு தம்மை சந்திக்க முடியும் என சு.க செயலாளர் ஊடாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
தற்பொழுதுள்ள சூழல் இருதரப்பு சந்திப்பிற்கு உகந்ததல்ல. அரசாங்க ஊழியர்கள் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுகின்றனர். இது சரியான முன்மாதிரியல்ல. இது குறித்து மீள கவனம் செலுத்த வேண்டும்.
ஜனாதிபதியை சந்தித்து விட்டு ரீ.பி. ஏக்கநாயக்கவின் வீட்டுக்கு செல்லும் போது மத்திய குழுவில் இருந்து அகற்றப்படும் கடிதம் வந்திருந்தது. ராஜபக்ஷ குடும்பத்தினர் பழிவாங்கப் படுகின்றனர். ராஜபக்ஷவினரை முற்றாக துடைத்தெறிய வேண்டுமென பிரதமர் கூறியிருக்கிறார். எமது கட்சி துண்டாடப் படுவதை நாம் விரும்பவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply