பழைய தேசியக் கொடியை பயன்படுத்தியமை தவறு தான் வருந்துகிறோம்; மன்னிப்பு கோருகிறோம்

சிறுபான்மையை குறிக்கும் நிறங்களற்ற பழைய தேசிய கொடியை ஆர்ப்பாட்டத்தில் பயன்படுத்தியது குறித்து மன்னிப்புக் கோருவதாக ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழஹப் பெரும தெரிவித்தார். இதனால் சிறுபான்மை யினருக்கு மனகஷ்டம் ஏற்பட்டிருந்தால் அது குறித்து வருந்துவதாக தெரிவித்த அவர் தவறுதலாகவே இந்தக் கொடி பயன் படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இந்த தேசியகொடி பயன்படுத்தப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

நாம் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் சிறுபான்மையினரை குறிக்கும் நிறங்களற்ற தேசிய கொடி பயன்படுத்தப்பட்டது பெரும் தவறாகும். இது குறித்து எமது கவலையை தெரிவிக்கிறோம். அது தொடர்பில் மன்னிப்பு கோருகிறோம். எதிர்காலத்தில் இவ்வாறு நடக்க இடமளிக்கமாட்டோம். எமக்கு தெரியாமல் இது நடந்துள்ளது. எமக்கு தெரியாதவர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

இந்த சம்பவத்தினால் சிறுபான்மை யினருக்கு ஏதும் மனவருத்தம் ஏற்பட் டிருந்தால் அது குறித்து வருந்துகிறோம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply