டெல்லி சென்றார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

நித்தி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் டெல்லி சென்றார்.மத்தியில் பாரதிய ஜனதா தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதும், மத்திய திட்டக் குழு கலைக்கப்பட்டு, நித்தி ஆயோக் எனப்படும் மத்திய கொள்கைக் குழு அமைக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்கள், மாநிலங்களின் முதலமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதன் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நித்தி ஆயோக்கின் 2வது கூட்டம் இன்று நடைபெறுகிறது. பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply